பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகள்!


இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickrematunge ) கொலை, வசிம் தாஜுதீன் (Wasim Thajudeen) கொலை, நடராஜா ரவிராஜ் (Nadarajah Raviraj) கொலை, ஜோசப் பரராஜசிங்கம் (Joseph Pararajasingh) கொலை, வெலிக்கட சிறை கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் பலவற்றை விசாரணை செய்யாது நீக்கிக் கொள்ளும் யோசனை ஒன்றை ஆளும் கட்சி பாராளுமன்றில் சமர்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

மேலும் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் அவர் கருத்து வௌியிடுகையில்,

அரசாங்கம் பல விடயங்களை பாராளுமன்ற விவாதமின்றி பின்வாசல் வழியாக பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.

மேலும் அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நீதிமன்றத்தின் அதிகாரங்களை மீறி ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளேயே தற்போது முன்னெடுக்கிறது.

அத்தோடு அரசாங்கம் பல விடயங்களை பாராளுமன்ற விவாதம் இன்றி பின்வாசல் வழியாக பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.

மேலும் அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நீதிமன்றத்தின் அதிகாரத்தை இரத்து செய்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெற்றதில்லை.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகருக் அறிவிக்காமல் எந்தவொரு விடயத்தையும் பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்க முடியாது. எனினும் துறைமுக நகர சட்ட மூலம் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாராளுன்றத்தில் பெரும்பான்மையை உபயோகித்து இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும். 2015 – 2019 காலங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மீண்டுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசாங்கத்திலுள்ள பலரும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களும் பல வழக்குகளிலிருந்தும் விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கம் பல செயற்பாடுகளையும் மறைமுகமாக செய்ய முற்படுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.