இலங்கையில் அதி உயர் ஜனாதிபதி விருது பெறும் தமிழர்!


ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மற்றும் புளியாவத்தை தமிழ் வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான கலாநிதி நவரட்ணராஜா விஞ்ஞானத்துறையில் அதி உயர் ஜனாதிபதி விருது வென்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

விஞ்ஞான ஆய்வுகளுக்கான விசேட ஜனாதிபதி விருது கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி நவரட்ணராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.

இவர் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்த வரும் மாணவர் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் கலாநிதி நவரட்ணராஜா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றார்.

கலாநிதி நவரட்ணராஜா ஹைலன்ட்ஸ் மற்றும் புளியாவத்தை ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் என்பதுடன் பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விருது குறித்து கலாநிதி நவரட்ணராஜா தனது முகநூலில் பதிவிடுகையில்,

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருதான “விஞ்ஞான ஆய்வுகளுக்கான ஜனாதிபதி விருதுகள்” எனது American Society of Civil Engineers (ASCE) சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றிற்காக இன்று (06/04/2021) இலங்கையின் தேசிய ஆராய்ச்சி சபை (National Research Council-NRC) இனால் வழங்கப்பட்டது.

ASCE journals are very high ranked international journals.கடினமான சவால்களை தாண்டி வந்த என் கல்விப் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல். கடின உழைப்பின் பின் இம்மாதிரியான விருதுகளை பெறுவது மற்றற்ற மகிழ்ச்சி. என்றும் போலவே இந்த விருதுக்கும் எனது சிறு வயது தொடக்கம் பல்கலைக்கழக கல்வி வரை கற்றுத்தந்த அனைத்து ஆசிரியர்களும் எனது பெற்றோரும் மற்றும் எனது குடும்பமும் உரித்துடையவர்கள்.

எனது ஆசிரியர் ஜீவராஜனும் எனது அப்பாவும் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். அவர்களது ஆசிர்வாதம் எப்போதும் எனக்குண்டு என அவர் பதிவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.