மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும்!


மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும் அத்தொடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகத்தினர் பின்வருமாறு கூறினர்.

மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் மாற்றும் சம்மேளனம் ஊடாக பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துகின்றோம்.

மிக முக்கிமாக மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகளுக்கான காப்பகம் அமைக்கப்பட வேண்டும். மிக முக்கிமாக ஆதரவற்றழர்களாக கவனிக்க முடியாத நிலையில் உள்ள மாற்று திறனாளிகளை பராமரிக்க முடியாத நிலை உள்ளது குறிப்பாக கொரோணா வைரஸ் பாதிப்பு காலத்தில் இப்படியான மாற்று திறனாளிகள் மிகுந்த பாதிப்பை எதிர் நோக்கி உள்ளனர்.

எனவே அவர்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு மாவட்டங்கள் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை உருவாக்கி தர வேண்டும்.

இரண்டாவதாக மாற்று திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 10000 கொடுப்பனவு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு இயங்குவதற்கான உதவிகள் உட்பட போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான கொள்கை உருவாக்கம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு மேலும் கருத்து தெரிவித்த மாற்று திறனாளிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 8000 மாற்று திறனாளிகளும், நாடு பூராவும் சுமார் ஆறு இலட்சம் மாற்று திறனாளிகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுளனர்.

ஆனால் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒரு அமைச்சு இலங்கையில் இல்லை. சமூக சேவை அமைச்சின் ஊடாகவே எங்களது பிரச்சினைகளை அரசாங்கம் அனுகி வருகிறது. ஆனால் எமக்கான ஒரு அமைச்சை அரசாங்கம் உருவாக்கி தர வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.