70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!!


 இலங்கையில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகிண்ணியா,  அல்தர் நகர், குட்டிக்கராச்சி, ரஹுமானியான் நகர், பெரியாத்துமனை, கிண்ணியா, மலிந்தூர்,  மண்வெளி, சின்ன கிண்ணியா, குறிஞ்சான்கேணி, கட்டையாறு, முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று குருநாகல், கிரிவுள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்கொட வடக்கு, ஹமன்கல்ல, நாரங்கொட தெற்கு, மல்கமுவ, பட்டபொதெல்ல,  நாரங்கமுவ மற்றும் தொடங்பொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மாத்தளை யட்டவத்தை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட அலவத்தை கிராமம் மற்றும் வல்பொல தெற்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு- கிரான்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலாப்பொடி வீதி, நெசவு நிலைய வீதி.  கண்ணகி அம்மன் ஆலயவீதி மற்றும் கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள விதானையார் வீதி, லேக்றோட் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகவானை, கெர்கசோல்ட், கொட்டியாக்கலை,லொய்னொன், பொகவந்தலாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று இரத்தினப்புரி- கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நுகவெல மேற்கு, உடஹவுபே, நுகவெல கிழக்கு, எந்தன,மடலகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இறக்குவாணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாப்பிட்ட வடக்கு, பனாப்பிட்ட தெற்கு, கெப்பெல, மியனவிட மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே களுத்துறை- இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றைகம் தோட்டம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட றைகம் தோட்டம் கீழ் பிரிவு மற்றும்  மஹா இங்கிரிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட றைகம்புர, றைகம் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை – பதியதலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேஹேல்வுல்ல கிராம சேவகர் பிரிவின் கடுபஹர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று காலி- எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படுவத்ஹேன, வல்லம்பகல கிராம சேவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நுவரெலியா- நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜஸ்றீ, வென்ஜர்,  டில்லரி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அகலவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்கொட கிராம சேவகர் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்பீல்ட் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.