கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் பேராயர் கேள்வி!!

 


துறைமுக நகர சட்ட மூலத்தின் வெளிப்படை தன்மை தொடர்பில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதனால் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாயர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,


துறைமுக நகர சட்ட மூலத்தின் வெளிப்படை தன்மை தொடர்பில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் இன்று இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் ஏன் இந்தளவிற்கு அவசரம் காண்பிக்கப்படுகிறது.


2019 மே மாதம் 31 ஆம் திகதி மதத் தலைவர்கள் இணைந்து எம்.சி.சி. ஒப்பந்ததிற்கு எதிராகவும் , இனிவரும் காலங்களில் எந்தவொரு ஆட்சியாளர்களும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க முடியாது என்றும் பிரகடனத்தை வெளியிட்டோம். அது கொழும்பு துறைமுக நகர விவகாரத்திற்கும் பொருந்தும். அண்மைக்காலமாக இலங்கையில் சர்வதேச நாடுகளில் சதித்திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.


எனவே இவ்விவகாரத்தில் அரசாங்கம் பொறுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். துறைமுக நகர வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் முதலில் சிங்கள மொழியும் , இரண்டாவதாக ஆங்கில மொழியும் , இறுதியான சீன மொழியும் காணப்படுகிறது. 2500 வருடம் பழமையான ஒழுக்கமும் கலாசாரமும் கொண்ட இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக் கொடுக்கும் உரிமை ஆட்சியாளர்களுக்கு இல்லை.


நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள 25 ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா ? எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அது தொடர்பில் குறைந்த பட்சம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட இதனை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அரசாங்கத்தை சிந்தித்து செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம் என பேராயர் கூறினார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.