பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,770பேர் பாதிப்பு!!

 


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 770பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 34ஆயிரத்து 860பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 605பேர் உயிரிழந்துள்ளனர்.


தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 59ஆயிரத்து 44பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 163பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 42இலட்சத்து 48ஆயிரத்து 211பேர் பூரண குணமடைந்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.