யாழ் குருநகரில்  திருமண வைபவத்தில் பங்கேற்ற 16 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!


யாழ்ப்பாணம் குருநகரில் அனுமதிக்கு மேலதிகமாக திருமண வைபவத்தில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் (14) யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.  


,இதேவேளை கரவெட்டி பகுதியில் கொவிட்- 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதிக்குச் பொலிஸார் சென்ற போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலர் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக குறித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற அவர் மணமகன், மணமகள் குடும்பத்தினர், திருமண நிகழ்வை நடத்திய குருக்கள் மற்றும் புகைப்படப் பிடிப்பாளர் ஆகியோரை தனிமைப்படுத்தினார். 


இதேவேளை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையோரையும் புகைப்படப்பிடிப்பாளர்களிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று தனிமைப்படுத்தி வைப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.