கதிர்ச்செல்வன்மீது கைவைத்த இ.தொ.கா., பாரதிதாசனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமா?

 


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிச்செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்தும் இடைநிறுத்தியது. 2020 டிசம்பர் மாதத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி விருந்துபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் தலவாக்கலை - லிந்துல நகரசபையின் தலைவர், இ.தொ.கா. உறுப்பினர் பாரதிதாசன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் 6 வர்த்தகர்களும் அவருடன் கைதானார்கள். அவர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்ச்செல்வனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுபோல பாரதிதாசனுக்கு எதிராகவும் இ.தொ.கா. நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுப்பட்டுள்ளது. மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலேயே இக்கேள்வி எழுப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.