இலங்கையில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களை நான் அழைக்கின்றேன்.!


தென்னாசிய பிராந்தியத்தை மாற்றும் பயணத்தில் ஒன்றிணைந்து இலங்கையில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களை நான் அழைக்கின்றேன்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்தியத்தின் முக்கிய சேவை மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை மாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாகும்.
இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவமான பயன்களையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்த, அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகச் சங்கம் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த -
“2021 இலங்கை முதலீட்டு மன்றம்” என்ற தலைப்பிலான மூன்று நாள் அமர்வை இன்று முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இந்த தகவல்களை முன்வைத்து நான் அழைப்பினை விடுத்தேன்.
இம்மன்றத்தின் மூலம், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான முழுமையான அனுபவம் மற்றும் விரிவான புரிந்துணர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்றத்தின் இரண்டாம் நாளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மூன்றாவது நாளில், நிதி, மூலதனச் சந்தை விவகார இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
2030ஆம் ஆண்டுக்குள், இலங்கையின் தேசிய உற்பத்தியைத் தற்போதைய மட்டத்திலிருந்து தனிநபர் மொத்தத் தேசிய உற்பத்தி 8000 அமெரிக்க டொலர்கள் வரை இரட்டிப்பாக்குவதற்காக -
துரித பொருளாதார வளர்ச்சித் திட்டமொன்றைத் செயற்படுத்தியுள்ளதனை்நான் சுட்டிக்காட்டினேன்.
தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்தீரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வி அறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை என்பன, இந்த நாட்டின் சக்திகளாகும் என்பதனை நான் சுட்டிக்காட்டியதுடன்,
அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்கை அடைவதற்கான தளத்தை அமைப்பதற்கு, இவற்றைப் பயன்படுத்துவதனையும் குறிப்பிட்டேன்.
கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாகவே பல நூற்றாண்டுகளாக இலங்கை இருந்து வருகின்றது.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகங்களில் காணப்படுகின்ற சர்வதேச தரத்திலான வசதிகள் ஆவன - இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு, செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கக்கூடிய இயலுமைகளைக் கொண்டுள்ளன.
பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாக இலங்கை நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதால்,
மேற்படி துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதனை நான் சுட்டிக்காட்டினேன்.
ஆரோக்கியமான மற்றும் சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிப்பதில், அரசாங்கம் ஓர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டுள்ள எமது பிராந்திய மக்களுக்கு, உயர்தரமான விவசாய உற்பத்திகளை வழங்க இலங்கையால் முடியும்.
இச்சூழலில், புதிய தொழிநுட்பங்கள் மற்றும் விவசாய முறைமைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதனையும் நான் குறிப்பிட்டேன்.
2030ஆம் ஆண்டுக்குள், தேசிய மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு.
மின்சார விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் தொழில்மயமாக்கலை மேம்படுத்துவதற்கு, பாரியளவிலான சூரிய, காற்றாலை மின்திட்டங்களில் முதலீடுகளைச் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன்.
பல உயர் தொழிநுட்பக் கைத்தொழில்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்கள் இலங்கையில் உள்ளன.
இந்த வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கின்ற உற்பத்திக் கைத்தொழிலில் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிப்பதோடு,
எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் பாதையை நோக்கிப் பிரவேசிப்பதற்கும் எதிர்பார்ப்பதால்,
அதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதனையும் நான் குறிப்பிட்டேன்.
உலகம் முழுவதும் வசிக்கின்ற பிரதான முதலீட்டாளர்களில் 3500க்கும் மேற்பட்டோர், காணொளி தொழிநுட்பத்தினூடாக இந்த மூன்று நாள் அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக நடைபெறும், ஆசியாவின் முதலாவது மற்றும் பாரிய வழிகாட்டல் மன்றம் இது என்று இதன் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தொழில் முயற்சியாளர்களின் வசதி கருதி, இரண்டாவது அமர்வாக மன்றத்தை ஔிபரப்புச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி ஷப்ரி, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே (Gopal Baglay), தென்கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோன்க் (Woonjin Jeong), ஜப்பான் தூதுவர் அக்கிரா சுக்கியாமா (Akira Sugiyama), சீனத் தூதுவர் சீ செங் ஹொங், (Qi Zhen hong), ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிக்குழுவின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பிரேட் (Thorsten Bargfrede) மற்றும் அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் பிரதம தூதரக உத்தியோகத்தர் மாட்டின் கெலி (Martin Kelly) ஆகியோர் வளவாளர்களாக இன்றைய அமர்வில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய அமர்வுகளில், அந்தந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான தூதுவர்கள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
கொள்கை வகுப்பாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக, சர்வதேசப் பேச்சாளர்கள் பலரும் அமர்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.