தேசிய சேமிப்பு வங்கியின் அபார வளர்ச்சி!

 


தேசிய சேமிப்பு வங்கி, எமது அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ், அபார வளர்ச்சியை கண்டுள்ளது: 2019 டிசம்பர் 31ஆம் திகதியில் 1.2 டிரில்லியன் ரூபாய்காளாக காணப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த சொத்து அமைப்பு - 17.8 சதவீத வளர்ச்சியுடன் 2020 டிசம்பர் 31ஆம் திகதியில் 1.4 டிரில்லியன் ரூபாய்களாகக் காணப்படுகின்றது. எமது அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார செயல்முறை முன்முயற்சி காரணமாக - தனது வரலாற்றில் என்றுமே பதிவு செய்திராத வளர்ச்சியாக - 2020 ஆம் ஆண்டில், வரிக்கு முந்தைய மற்றும் வரிக்கு பிந்தைய மிக உயர்ந்த இலாபங்களைத் தேசிய சேமிப்பு வங்கியினால் ஈட்ட முடிந்துள்ளது. அதற்கமைய - 2019ஆம் ஆண்டில் பதிவான 10.5 பில்லியன் ரூபாய்கள் மதிப்புடன் ஒப்பிடுகையில் - 49.5 சதவீத வளர்ச்சியுடன், 15.6 பில்லியன் ரூபாய்கள் வரிக்கு முந்தைய இலாபத்தினையும், 2019ஆம் ஆண்டில் பதிவான 6.4 பில்லியன் ரூபாய்கள் மதிப்புடன் ஒப்பிடுகையில் - 58.4 சதவீத வளர்ச்சியுடன் 10.1 பில்லியன் ரூபாய்கள் வரிக்கு பிந்தைய இலாபத்தினையும் வங்கி பதிவுசெய்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக - நிலவும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் - 2021ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில், முன்னைய ஆண்டைப் போலவே - தொடர்ச்சியான மற்றும் வலுவான செயல்திறனை தேசிய சேமிப்பு வங்கியினால் பதிவு செய்ய முடிந்துள்ளது. அத்துடன் - தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த கடன் சலுகைகளில் 90 வீதம், 7 வீத சலுகை வட்டியுடன் வழங்கப்பட்டுள்ளதுடன், மேற்படி கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு சலுகைத் தவணைக் காலமும், ஒரு கடன் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை இதுவரை பூர்த்தி செய்துள்ளதுடன், வீடமைப்பு கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்குதலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட கடன் திட்டம் ஒன்றும் தேசிய சேமிப்பு வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6.75 சதவீத நிவாரண வட்டி அடிப்படையில் 15 ஆண்டுகளில் செலுத்தி முடிக்கும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இத்தகைய ஒரு சிறந்த சேவையினை நாட்டு மக்களுக்கு வழங்கும் அதே வேளையில், ஒரு சிறந்த வளர்ச்சிப் பெறுபேறையும் அடைவதற்காக உழைத்த - தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி. கேஷிலா ஜயவர்தன அவர்களுக்கும், வங்கியின் பணிப்பாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், அவர்களது பணி மேலும் சிறப்புடன் தொடர் எனது வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன் என்றார் கோட்டாபயராஜபக்‌ஷ.

 #gotabayarajapaksa #GR

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.