பயணத்தடை காலத்தில் சட்டவிரோதமான மசாஜ் நிலையம் திறப்பு!!

 


பயணத்தடை காலத்திலும் கொழும்பு தெற்கு கல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மசாஜ் நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படும் அனைவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .
கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.