யானைக்கட்சியின் பிரபலம் சஜித்துடன் இணைவு!!

 


ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் எதிலும் தாம் பங்கேற்க போவதில்லை என்றும், அனைத்து பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்தும் விடைபெறுவதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தனக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்திற்க்கு எதிராக தனது நிலைப்பாட்டை  இணையத்தளம் ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தில் எந்தவொரு செயற்பாட்டிலும் தாம் இனி பங்கேற்பதில்லை. அனைத்துவித கடமைகள், பொறுப்பிக்களில் இருந்தும் விலகி சுதந்திரமாக வாழ்க்கையை வாழ தீர்மானித்துள்ளேன். வழங்கப்பட்ட பொருத்தனை மற்றும் இணைக்கப்பாட்டிற்கு அமைய ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் பதவியை எனக்கு அளிப்பதாக கூறியிருக்கிறார்.

எனினும் அது நடக்கவில்லை. தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் தீர்மானத்தை அக்கட்சி சற்று பரிசீலித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தம்முடன் இணையும் படி எனக்கு பலதடவை அழைப்பு விடுத்தனர்.

அதனை நான் நிராகரிக்கவில்லை. அழைப்பை நிராகரிக்கவும் காரணமும் இருக்கவில்லை. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்வேன்.ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக எனது பெறுமதியை அவர்கள் கண்டுள்ளனர். நான் ஒருபோதும் தேர்தலில் தோல்வியடையவில்லை.

2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியல் ஊடாக வருவதற்கு நான் எடுத்த தீர்மானம், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகும்.தோல்வியடைந்த ஒருவரை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கும் கலாசாரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்ததில்லை” எனக்கு கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.