யோகா பயிற்சியில் மஹிந்த மற்றும் மனைவி!!

 
ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் அந்தவகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவும் கோகா பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த புகைப்படத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ சர்வதேச யோகா தினம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்களை ஆன்மாவுடனும் உள் மனத்துடனும் இணைப்பதற்கான வழியே ஆன்மா". இயற்கையுடன் இணைவதற்கான பாதையையும் யோகா காண்பிக்கிறது ” என தெரிவித்துள்ளார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.