பொலித்தீன்களுக்கும் தடை – அரசாங்கம் அவசர நடவடிக்கை!!

 


உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்த முடிவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் பண்படுத்தப்டுகின்றமை மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

உணவுப் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மண்ணில் சிதைந்தாலும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.