டயகம சிறுமி மரணம் - சந்தேகநபர்கள் நீதிமன்றில்

 


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரும் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


இவர்கள் மூவரும் நேற்று (23) பிற்பகல் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

16 வயதுடைய சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இதற்கு முன்னர் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்திருந்தது.

அதன்படி, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.