பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்!!

 


யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழில் அமைக்கபட்ட குறித்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த போது, 160 கோடி ரூபா செலவில் இந்திய கலாசார நிலையத்தை கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த நிலையில் கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டதால் அவரே திறப்பு விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அவரே இந்தக் கட்டடத்தை திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டதும் இந்தியப் பிரதமர் மோடியே இதனை திறந்து வைக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த வருடம் விசேட அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கலாசார நிலையத்தை பிரதமர் மோடி வருகை தந்து திறந்து வைப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அது தொடர்பான விபரம் அறிவிக்கப்படுமெனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டிட திறப்பு நிகழ்வில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் இடம்பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறதாக  கூறப்படுகின்றது.

இதேவேளையில் தற்பொழுது இலங்கையில்  சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்த அழைப்பினை இந்தியா சாதகமாக   பயன்படுத்தும் என டெல்லி தகவல்கள் தெரிவிப்பதுடன், இலங்கை அரசாங்கமும் அதனையே  விரும்புவதாகவும் அந்த   தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.