விளையாட்டு சங்க நிறைவேற்றுக்குழு தெரிவு!!

 


இலங்கை விளையாட்டு சங்கங்களின் நிறைவேற்றுக் குழு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுக் கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு , இல .9 , பிலிப் குணவர்தன மாவத்தை கொழும்பு 07 இல் உள்ள 04 ஆம் மாடியில் டன்கன்வைட் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இலங்கை வலைப்பந்து சம்மேளனம் , இலங்கை ஜு டோ சங்கம் , இலங்கை ஸ்கிரபெல் சம்மேளனம் , இலங்கை சர்பீன் சம்மேளனம் . இலங்கை ஜூ ஜிட்சு சம்மேளனம் நிறைவேற்றுக் குழுக்களிற்கான உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்காக நியமக்கப்பட்ட தேர்தல் குழுவை அறிமுகப்படுத்தல் மற்றும் விஷேட மகா சபைக் கூட்டம் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இற்கு 2021 ஜூலை மாதம் 13 ஆம் திகதி வழங்கப்பட்ட 2236/6 இலக்க அரச வர்த்தமானியூடாக அதிகாரமளிக்கப்பட்ட சங்கங்கள் சம்மேளனங்களின் குழுக்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்ளல்களிற்காக நடாத்தப்படும் விஷேட பொதுக்கூட்டம் 2021 ஜுலை 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மு.ப .09.30க்கும், இலங்கை ஜூடோ சங்கம் மு.ப .11.30க்கும், இலங்கை ஸ்கிரெபல் சம்மேளனம் பி.ப .01.30க்கும், இலங்கை சர்பின் சம்மேளனம் பி.ப 02.30க்கும், இலங்கை ஈஜிட்சு சம்மேளனம் பி.ப .04.00க்கும் நடைபெறவுள்ளது.
இதற்காக இலங்கை வலைப்பந்து இலங்கை ஜுடோசங்கம் , இலங்கை ஸ்கிரெபல் சம்மேளனம் இலங்கை சர்பின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு சம்மேளனத்துக்கு மேற்படி சம்மேளன சட்டவாக்கத்தின் பிரகாரம் இணைந்த விளையாட்டுக்கழகம் நிறுவனம் சங்கங்கள் இருப்பின் அவ்வாறான இணை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியொருவர் மேற்படி தினம் மற்றும் நேரத்தில் தமது விளையாட்டுக்கழகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இவ்விஷேட மகாசபைக் கூட்டத்தில் பங்குபற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.