கோட்டாபய ராஜபக்ச, ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில்!

 


ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துட அந்த பட்டியலில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட உலக தலைவர்களின் படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட கருத்துக்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய இணைக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரம் மீண்டும் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் துணிந்து கருத்து தெரிவிப்பதற்கு முற்படுபவர்கள் இரண்டு வகையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். ஒன்று நீதித்துறை சார்ந்தது- பொலிஸார் பிடியாணையுடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன இரண்டாவது உடல்ரீதியிலான அச்சுறுத்தல்கள் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைப்பாடு செய்யப்பட்டாலும் பொலிஸார் அந்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்தல் இலங்கையை அதன் வரலாற்றில் மோசமான இருள்படிந்த காலங்களிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி பத்திரிகையாளர்களுக்கு பழைய அச்சங்களை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.