யாழில் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!!


நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, யாழ்ப்பாணம் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் 2021.08.19 மற்றும் 2021.08.20 ஆகிய திகதிகளிற்கான கடமைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த அறிக்கையில், இத்திகதிகளில் நடைபெறவிருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சைகள் யாவும் கீழ் குறிப்பிடப்படும் திகதிகளில் அறிவிக்கப்படுகின்ற நேரத்திற்கு நடைபெறும்.

2021.08.19 வியாழக்கிழமை பரீட்சைகள் 2021.08.21 ம் திகதி சனிக்கிழமையும், 2021.08..20 வெள்ளிக்கிழமை பரீட்சைகள் 2021.08.23 ம் திகதி திங்கட்கிழமையும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 2021.08.19 வியாழக்கிழமை நடைபெறவிருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப்பரீட்சைகள் யாவும் 2021.08.23ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்.

அத்தோடு மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் 2021.08.23 – 2021.08.27 வரை வழங்கப்பட்ட, வழங்கப்படவுள்ள நுழைவுச்சீட்டிற்கு அமைவாக நாளாந்தம் 50 நுழைவுச்சீட்டுக்கள் என்ற அடிப்படையில் நடைபெறும்.

மேலும் மோட்டார் வாகன உடமை மாற்றம் தொடர்பான கடமைகள் யாவும் உரியவர்கள் முற்பதிவு செய்த ஒழுங்கில் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டமைக்கமைவாக நடைபெறும்.

அத்தோடு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான முடிவுத் திகதி தொடர்பாக, 2221/57ஆம் இலக்க 2021.04.01ம் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அதி விசேஷ வர்த்தமானியின் பிரகாரம் 2021 ஏப்பிரல் 1ம் திகதி முதல் செப்ரம்பர் 30 வரையில் காலம் முடிவடைகின்ற அனுமதிப் பத்திரங்களிற்கு காலாவதித் திகதியில் இருந்து 06 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளது. இதற்கமைவாக எம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் பொது மக்களிற்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன்.

மேலதிக மாற்றங்கள் ஏதாவது ஏறபடின் பின்னர் அறியத்தரப்படும் என்பதனையும் தயவுடன் அறியத்தருகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.