11ஆம் ஆண்டு திருமண நாள்!

 


தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கி, பாலசந்தர் இயக்கத்தில் தயாரான டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். நடிகர் ரகுவரன் மறைவுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் சூழல் நிலவிய நடிகர்.

நடிகை லலிதாகுமாரியை 1994இல் காதல் திருமணம் செய்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் 2009இல் மனக்கசப்பு காரணமாக பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரி ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்

அதையடுத்து 2010இல் போனிவர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ்ராஜ். அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதியான நேற்று தங்களது 11ஆவது திருமண நாள் என்பதால் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதில், என்னுடன் 11 ஆண்டுகளாகப் பயணம் செய்து வரும் எனது அன்பு மனைவிக்கு நன்றி. ஒரு அற்புதமான மனைவியாகவும், சிறந்த தோழியாகவும் என்னுடன் பயணித்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அண்ணாத்த, எனிமி படங்களைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் உள்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

-இராமானுஜம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.