யேர்மனி பேர்லின் நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!📸

 


தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 10 ஆவது  தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி


தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை  ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்  யேர்மனி பேர்லின் நகரில்  10 ஆவது  தடவையாக   உள்ளரங்க உதைப்பந்தாட்டச்  சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது .


தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் மற்றும் செஞ்சோலை சிறார்களின் திருவுருவப் படத்திற்கும்  சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது .


இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்  மேற்பிரிவுக்கான உள்லூர் 6 கழகங்கள்     பங்குபற்றினர்.


சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள் . தியாகி திலீபன் அவர்களின் நினைவாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இப் போட்டி நிறைவு பெற்றது .


இம்முறை நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்டச்  சுற்றுப்போட்டியை பேர்லின்  மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் மூன்றாம் தலைமுறையினர் சிறப்பாக முன்னின்று நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.