2 கோடிக்குமேல் வட மாகாண கல்வி திணைக்களத்தில் முறைகேடு!!

 


வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11500.00 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றதாகவும், எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 



Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.