நடிகை சரண்யா தளபதிக்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லையாம்!!

மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இதனைத் தொடர்ந்து 1980களில் ஒருசில படங்களில் நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன் எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றபின், திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களின் அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக 2005ஆம் ஆண்டு வெளியான ‘ராம்’ திரைப்படம். அதன்பின் ‘தவமாய் தவமிருந்து’, ‘எம்டன் மகன்’, ‘களவாணி’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் விளைவாகவே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்திற்காக சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்தது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். முதலில் இவர் இயக்குனரும் நடிகருமான ராஜசேகரன் என்பவரை மணந்து கொண்ட நிலையில், அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மணமுறிவு ஏற்பட்டு பின்பு சக நடிகரான பொன்வண்ணன இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்பு சினிமாவில் பெரும்பாலும் அம்மா கேரக்டர் என்றாலே. அனைவரின் மனதிலும் தோன்றும் அளவுக்கு சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு கச்சிதமாக பொருந்தியது. எனவே டாப் ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணனே நடிப்பார். ஏனென்றால் அவருடைய நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கும்.

எனவே தற்போது இவருடன் இதுவரை நடித்த கதாநாயகர்களை இணைத்து ‘என் மகன்கள் சரண்யா’ என்ற தலைப்பில் குடும்ப புகைப்படமானது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் இதுவரை சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்த கதாநாயகர்களாக,

அல்டிமேட் ஸ்டார் அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், சசிக்குமார், உதயநிதி ஸ்டாலின், ராகவா லாரன்ஸ், ஜீவா, பரத் ,விமல், சேரன் உள்ளிட்ட 13 கதாநாயகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தளபதி விஜய் மட்டும் காணவில்லை. இருப்பினும் சரண்யா பொன்வண்ணன் தளபதி விஜய்யின் குருவி, சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றபோதிலும் ஏன் தளபதி விஜய் இந்த புகைப்படத்தில் இடம் பெறவில்லை? என்ற கேள்வியை அவருடைய ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படமானது சோசியல் மீடியாக்களில் சினிமா ரசிகர்களின் பார்வையில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.