தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு!!

 


அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.

இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.