துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கான அறிவித்தல்!

 


துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்வரும் 2021 டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 2022 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.