வான் பாயும் நிலையில் கிளிநொச்சி குளங்கள்!


நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடர்மழை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சியின் மிகப்பெரும் குளமான, 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. 25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடி அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடு குளம் அடைவுமட்டத்த அடைந்து 1 அங்குலம் வான் பாய்ந்து வருகிறது. அதேவேளை 19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் அடைவுமட்டத்த அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் அடைவுமட்டத்த அடைந்து 7 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

இந்நிலையில் , 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 4 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.

8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் அடைவுமட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலு்ம, மாவட்டத்திற்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்ப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அதேநேரம் , நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்ப தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.