வெளிவிவகார அமைச்சு வெளிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!


இன்று முதல் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தரும் 150 சேவை பெறுநர்களுக்கு மாத்திரமே சேவைகளை வழங்க முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகளினால் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இதன்போது குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (ஈ-டாஸ்) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவதில் நீண்ட காலத் தாமதம் ஏற்பட்டது.

மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்ள கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தப் பிரச்னைகளை சீர் செய்யும் முகமாக அமைச்சின் தொழில்நுட்பக் குழு செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த சூழ்நிலையில், இன்று (22.11.2021) முதல் தினசரி வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியும்.

இந்தப் பிரச்னைகள் சீர் செய்யப்பட்டவுடன் சான்றிதழ்கள் / ஆவணங்களின் சான்றளிப்புக்கான சாதாரண சேவைகள் வழங்கப்படும். கணினிப் பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்காக 011- 2338812 அல்லது dgcons@mfa.gov.lk மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.