அம்மா கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் - கண்ணீர் விடும் மகள்!


மட்டக்களப்பு பார்வீதியில் வேலைக்காரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தயாவதியான த னது அம்மாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தயாவதியின் மகள் கண்ணீருடன் தெரிவித்தார்.

தயாவதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவரின் கணவர் மற்றும் மகள் நேற்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் பதிவு செய்ய சென்று திரும்பியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இதன்போது உயிரிழந்த தயாவதியின் மகள் கூறுகையில்,

நான் எல்லா பட்டங்களும் அம்மாவுக்கு சேரவேண்டும் என படித்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த சம்பவம் ஊடகம் ஊடாக வெளிவந்தது. இது ஒரு படிப்பினை எனவே இப்படியான சம்பவங்களை ஆறவிடாமல் அந்த இடத்திலேயே தண்டனை வழங்கினால் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.

அதோடு இவ்வாறான செய்யப் போறவனுக்கும் ஒரு பயம் வரும். எனது தாயாரை வெட்டிய அவளே ஒத்துக் கொண்ட பின்னர் அந்த இடத்திலே தண்டனையை வழங்குங்கள். அப்போது தான் நியாயம் கிடைக்கும் தாய் இல்லாமல் ஒரே ஒரு பெண்பின்ளை படும் வேதனை ஒருவருக்கும் விளங்காது என்றும் அவர் கூறினார்.

நான் உயிருடன் இருப்பது அப்பாவுக்காக அதேவேளை பல்கலைக்கழகத்துக்கு படிக்கபோக முடியாது உள்ளது என்ன நடக்கும் என்று பயம் ஏற்பட்டுள்ளதாக தயாவதியின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தயாவதியின் கணவர் செல்வராசா தெரிவிக்கையில்,

எங்களுக்கு கண்டிப்பாக நீதி தேவை எனது மனைவியின் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட்ட சோற்றுக்கு செய்த வேலையை விடமுடியது இதனை ஆறவிடக் கூடாது இந்த நிகழ்வு எங்களுக்கே தாங்கமுடியாமல் இருக்கின்றது. அதேவேளை எங்கள் வீட்டில் எனது மனைவிக்கு நடந்த சம்பவம் எவருக்கும் நடக்ககூடாது என்றார்.

கடந்த 20 ம் திகதி பார்வீதியில் தயாவதியை வேலைக்காரியான 27 வயதுடைய ரவிகார்த்திகா கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.