இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பயணம்!!

 


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து புறப்பட்டார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் தளத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடினார்.

இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகளில் மற்றும்  அச்சமுத்திரத்தை பரவலாக பயன்படுத்துகின்ற ஏனைய நாடுகளை பாதிக்கின்ற பொது அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு “ இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.

இம் மாநாட்டில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளார்.

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.