ஒமிக்ரோன் தொற்றின் புதிய அறிகுறிகள்!


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைறசின் திரிபான ஒமிக்ரோன் தொற்றின் புதிய அறிகுறிகள் குறித்து விஞ் ஞ னிகள் ஆராய்ந்துள்ளனர். அதில், ஒமிக்ரோனுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி தொண்டை வலி (Sore throat) இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

‘ஒமிக்ரோன்’ இது தான் உலகம் உச்சரித்து வரும் புதிய பெயர். கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய புதிய வகையான ஒமிக்ரோன், அதிவேகத்தில் பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதோடு டெல்டா வகையை விட ஒமிக்ரோன் (Omicron) மிகவும் வேகமான பரவக் கூடியதாகவும், இது தடுப்பூசி திறனை பாதிப்பதாகவும், தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாகவும் ஒமைக்ரான் கூறப்படுகிறது.

தென் ஆபிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன், கண்டறியப்பட்டு ஒரு மாதத்திற்குள் சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஒமிக்ரோன் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமிக்ரோனுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அது தான் தொண்டை வலி (Sore throat). ஒமிக்ரோனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை தென் ஆபிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 முதல் 10ஆம் திகதி வரை பிரிட்டனில் ஒமிக்ரோன் பாதித்தோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தலைவலி, சோர்வு, ‘முக்கியமாக’ குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ZOE Symptom Tracking எனப்படும் ஒமைக்ரான் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமைக்ரானின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் டெல்டாவுக்கும், ஒமிக்ரோன் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருப்பதுடன் சிலருக்கு குடல் பிரச்சினைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒமிக்ரோன் அறிகுறிகள் ஆய்வினை தலைமையேற்று நடத்தியிருக்கும் விஞ்ஞானியான, பேராசிரியர் டிம் ஸ்பெண்டர் கூறுகையில், ஒமிக்ரோனின் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக இருக்கிறது.

எனவே, மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அது கோவிட்டாகவும் இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.