இலங்கையில் மலேரியா தொற்றாளர் அடையாளம்!!

 


காலி,நெலுவ பிரேதேசத்தில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகாண்டாவில் பணியாற்றிய குறித்த நபர் மூன்று மாதங்களுக்குப் முன்னர் இலங்கை திரும்பியதாக தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது மலேரியா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது.     

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.