மலர்ந்துள்ள 2022 மேலும் சிறப்பானதாய் அமைய வாழ்த்தி மகிழும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

இனிதாக மலர்ந்துள்ளது 2022. புத்தாண்டு வாழ்வில் நம்பிக்கை விதைக்கும். புத்தாண்டு வாழ்வில் மலர்ச்சியைக் கொடுக்கும். புத்தாண்டு எதிர்பார்ப்புகளை நோக்கி முன்னேறும் பலத்தைத் அளிக்கும். புத்தாண்டு, கடந்த காலத்தில் பெற்ற பட்டறிவின் நீட்சியாக வாழ்வை மேலும் சிறப்பானதாக்கத் திட்டமிட துணைநிற்கும். தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் மலர்ந்துள்ள 2022 மேலும் சிறப்பானதாய், மகிழ்வானதாய் அமைய வாழ்த்தி மகிழ்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.
புத்தாண்டில், எம் தாய்மொழியின் மேன்மைக்கான பணிகளை மென்மேலும் உத்வேகத்துடன் முன்னெடுப்போம் என்று உறுதியெடுத்துக்கொள்வோம். தளராது எம்பணி தொடர்வோம்.

க . ஜெயகுமாரன் பொறுப்பாளர் .
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.