இலங்கை வாங்கிய கடன் விபரம் வெளியானது!
இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பட்டியல் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தகவலின்படி, 2020ஆம் ஆண்டு 1,875 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும், 2021ம் ஆண்டு 3,312.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும் இலங்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சிக் காலத்தில் மாத்திரம் 5,187.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை