முக்கிய கோரிக்கை விடுத்துள்ள ரணில்!


நாட்டில் எதிர்வரும் 18-01-2022 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய உரை மீதான ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளைக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13-12-2021ஆம் திகதி நிறைவு செய்ய ஜனாதிபதி தீர்மானித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஜனவரி 18-01-2022 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 19, 20 அல்லது 21 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) ஆகியோருக்கு ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.