புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!

 


2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை(22) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.


சிங்கள மொழி மூலத்தினூடாக 255,062 பேரும், தமிழ் மொழி மூலத்தினூடாக 85,445 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் வைரஸ் பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டது.


இவ்வாறதனதொரு சூழலில் இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி மேற்படி பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டது.


இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுள் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்காக 108 தனியான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சைக்காக 496 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.


கொவிட் தொற்றுக்குள்ளான பிள்ளைகள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று பிசீஆர் அல்லது ரெபிட்அன்டிஜன் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து விசேட நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


அதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அறிகுறிகளைக்கொண்ட மாணவர்களுக்கு அந்தந்த மையங்களில் ஒரு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேர்வுக்கு முகம்கொடுக்க முடியும்.


பெற்றோர்கள் உட்பட மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.