சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் பல அதிகாரிகள்,பணிஇடை நீக்கம்!!

 


பல நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு

 வரும் சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் பல அதிகாரிகளை, பணிஇடை நீக்கம் செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.


சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் விசாரணைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சதொச நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்து நிதி முறைகேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறும், மூன்று அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்துமாறும் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.