பொதுமக்களுக்கான அறிவித்தல்

 


உரிமம்பெற்ற வங்கிகளினால் நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் செலாவணி வீதங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு உயர்வான செலாவணி வீதங்களை வழங்குவதிலிருந்து அத்தகைய நாணய மாற்றுநர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.


உரிமம்பெற்ற வங்கிகளினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களைத் தாண்டிய வீதங்களில் ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை அவர்கள் மேற்கொள்வார்களாயின் அவர்களது உரிமங்கள் இடைநிறுத்தப்படலாம்/ இரத்துச்செய்யப்படலாம் என நாணய மாற்றுநர்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.