குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் கிரெம்ளின் விமர்சகர்!!


சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார்.

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, இன்று (செவ்வாய்க்கிழமை) மாஸ்கோவிற்கு வெளியே உள்ள சிறைக் காலனியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அங்கு அவர் ஏற்கனவே இரண்டரை வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், தற்காலிக நீதிமன்றத்தில் தனது கருப்பு சிறைச் சீருடையுடன் விசாரணையை எதிர்கொண்டார்.

இதன்போது, 45 வயதான அலெக்ஸி நவல்னியை மோசடி செய்தமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிபதி மார்கரிட்டா கோடோவா அறிவித்தார்.

இந்த உத்தரவின் மூலம் அவர் 13 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நவல்னி, ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்நாட்டு விமர்சகர் ஆவார். அவர் தனது அரசியல் அமைப்புகளுக்கு 3.5 மில்லியன் பவுண்டுகள் நன்கொடைகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்றரை வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். எனினும் அவர் அந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.

2020ஆம் ஆண்டு நவல்னி விஷ தாக்குதலில் முயற்சியில் இருந்து தப்பி, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜேர்மனியில் புனர்வாழ்வு முடிந்து நாடு திரும்பிய போது கைதுசெய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிநாடுகளில் பரவலான கண்டனத்தையும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பொருளாதாரத் தடைகளையும் தூண்டியது.

மேலும், அவரது கைதுக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள நவல்னியின் அரசியல் அமைப்புகள் ‘தீவிரவாதிகள் குழு’ என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன, அதே நேரத்தில் பல முக்கிய உதவியாளர்கள் வழக்குக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறினர்.

கடந்த மாதம் மாஸ்கோவின் கிழக்கே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் புதிய மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அவர் மீண்டும் விசாரணைக்கு வந்தார்.

சிறையில் உள்ள நவல்னியின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. சிறை அதிகாரிகள் அவருக்கு சரியான மருந்துகளை வழங்க மறுத்துவிட்டனர் மற்றும் அவரது மருத்துவர் அவரை சிறையில் அடைக்க அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், சிறையில் இருந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பேசிய அவர், சக குடிமக்களுக்கு தினசரி போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.