உக்ரைனுக்கு பிரித்தானியா ஆதரவு!

ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை அதிகரிக்க வேலை செய்யும்

ரஷ்ய ஜனாதிபதி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் அவருக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி ஸெலென்ஸ்கியே கூறியது போல், உக்ரைன் மக்கள் வெற்றிபெற வேண்டும், புடின் தோல்வியடைய வேண்டும் அதை அவர் செய்வார்’ என கூறினார்.

இதனைத்தொடர்ந்து பி.பி.சி.க்கு அளித்த செவ்வியில், ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக உக்ரைன் மீதான தாக்கு


தலை தீவிரப்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவின் அளவை ஆதரித்தார். மேலும் 6,000 ஏவுகணைகளை நாட்டிற்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் உக்ரைனுக்கு ஆயுதப் படைகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூடுதல் 25 மில்லியன் பவுண்டுகள் உதவி வழங்குவதாகவும் கூறினார்.

அத்துடன் உக்ரைன் படையினருக்கு பாதுகாப்பு கவச ஆடைகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

போலந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய இரு நாடுகளிலும் துருப்புக்களை இரட்டிப்பாக்குவதற்கு மேல், பல்கேரியாவிற்கு புதிய பிரித்தானிய துருப்புக்கள் அனுப்பப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் புதிய போர்க் குழுக்கள் உருவாக்கப்படும் என்று நேட்டோவின் முந்தைய அறிவிப்பைத் தொடர்ந்து இது அமைந்துள்ளது.

முன்னதாக, மேலும் 65 ரஷ்ய குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.