ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் மனதை வெல்லமுடியாது!!

 


இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த  சரத் பொன்சேகா எம்.பி. "தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்." எனக்கூறியுள்ளார். 


அவர் மேலும், 


"2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதே மஹிந்த ராஜபக்சவை யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் வெறுத்துவிட்டார்கள். அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடக்கில் எனக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அதற்காக வடக்கு மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். 


வட, கிழக்கு மக்களின் மனதில் இவர்கள் என்றுமே இடம் பிடிக்கமுடியலே முடியாது என்றார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.