கடுமையான தீர்மானத்தை எடுத்த மத்திய வங்கி!

 


தவறிழைத்த நாணய மாற்றுநர்களுக்கெதிராக மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு....

அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அமைவிடங்களில் மத்திய வங்கி தொடர்ந்து தலத்திலான பரீட்சிப்புக்கள், பின்வரும் நாணய மாற்றுநர்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீதங்களுக்கு அப்பாலான வீதங்களில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருப்பதனையும் அதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகின்றன.

i. சுவிஸ் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 01 (தலைமை அலுவலகம்) மற்றும் கொழும்பு 06 (கிளை)

ii. வெஸ்ரேன் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 06

இதன்படி, மேற்குறிப்பிட்ட நாணய மாற்றுநர்கள் உடனடியாக நடைமுறைக்குவரும் விதத்தில் தொடர்பான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு கட்டளையிடுகின்ற விதத்தில் எச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

தவறிழைத்த நாணய மாற்றுநர்கள், எச்சரிக்கை அறிவித்தல்களூடாக அறிவிக்கப்பட்ட விடயங்களைத் திருத்திக் கொள்ளத் தவறும் சந்தர்ப்பத்தில் மத்திய வங்கி அவர்களுக்கு வழங்கிய உரிமப்பத்திரத்தினை இடைநிறுத்தும்/ இரத்துச் செய்யும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.