வன்முறை மூலம் சனநாயக ஆட்சியை  மாற்ற  முடியாது

 


இன்று பாராளமன்றத்தில் உரையாற்றிய திரு நாமல் ராஜபக்சே அவர்கள் வன்முறை மூலம் சனநாயக ஆட்சியை  மாற்ற  முடியாது என்று சொல்லி இருக்கிறார் 


ஆனால் ராஜபக்சே குடும்பம் வன்முறை மூலம் தங்களின் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்த  பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்று இருக்கிறது 


குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது போதிய பெருபான்மையை நிரூபிப்பதில் மஹிந்த ராஜபக்சே நிருவாக்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டு இருந்த  சமயம் 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு  மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை  வரவு செலவு  திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க  கோட்டாபயா ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வன்முறை மற்றும் சதி முயற்ச்சியில்  ஈடுபாட்டார்கள் 


இதற்காக இலங்கை புலனாய்வுதுறை பணிப்பாளராக இருந்த  இருந்த  மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண   அவர்களின் ஏற்பாட்டில் 2007 நவம்பர் 16 ஆம் திகதியன்று தங்களின் கூலிப்படையாக செயல்பட்ட பிள்ளையான் குழுவினர் மூலம் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்கள் 


இது மாத்திரமின்றி சம நேரத்தில் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட்டு இருந்த பாதுகாப்பையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாயா ராஜபக்சே நீக்கி இருந்தார் 


இது போதாதென்று அவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நவம்பர் 17 திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினராக இருந்த  கனகபை அவர்களின் மருமகன் சஜிதரன்  என்பவர் பிள்ளையான் குழுவால் கழுதாவளையில் வைத்துக் கடத்தப்பட்டார். 


அதே போல 2007 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  அரியநேந்திரனின் சகோதரர்  கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்


பாராளமன்ற உறுப்பினராக இருந்த காலம் சென்ற  தங்கேஸ்வரியின் செயலாளர் அன்புமணி நாகலிங்கம்


மற்றும் பாராளமன்ற உறுப்பினராக இருந்த ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகியோரும் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்டனர் 


இதை மீறி  சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று பிள்ளையான் குழுவினர்  தொலைபேசி முள்ளம் எச்சரித்து இருந்தனர் 


பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான் மற்றும்  பிரதீப் மாஸ்ரரே ஆகியோரே மேற்படி வன்முறையில் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தனர் 


மேற்படி கடத்தலை தொடர்ந்து  நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர் 


இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தை ராஜபக்சே குடும்பம் வன்முறை மூலம் பாராளமன்றத்தில் நிறைவேற்றக்கொண்டது 


இதை தொடர்ந்து கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 2007 ஆம் ஆண்டு   டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை பிள்ளையான் குழுவினர் விடுவித்து இருந்தனர்  


பாராளமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்க அவர்களின் உறவினரை கடத்தி கொலை அச்சுறுத்தல் விடத்து ஆட்சியை தக்க வைத்தமை வன்முறை இல்லையா ? 


உண்மையில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் சனநாயகம் குறித்தோ ஆட்சிமுறை குறித்தோ  பேச எந்த தகுதியும் கிடையாது


- இனமொன்றின் குரல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.