யேர்மனி வூப்பெற்றால் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற ஈகைச்சுடர் அன்னை பூபதி வணக்க நாள்!

பாவத்தின் சின்னமாய் பாய்ந்தெங்கள் மண்ணைப் பாழ் செய்த பாரதப் படைக்கெதிராய் சத்திய விளக்கேந்தி ஈகத்தின் எல்லைவரை சென்று நிமிர்ந்தெழுந்து குன்றின் சுடராய் குவலயதிற்க்குரைத்த அன்னைபூபதி நாட்டுப் பற்றாளர் எழுச்சி நாள் 23.04.2022 சனிக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் சிறப்பாக நிகழ்ந்தேறியது.
இவ் நிகழ்வில் நாட்டுப் பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படமும் ஜெர்மனியில் தமிழீழதேசியத்தோடு தம்மை இணைத்துப் பணியாறிய மாமனிதர் , நாட்டுப்பற்றாளார்கள்
1. மாமனிதர்
இரா.நாகலிங்கம் ஐயா
நாட்டுப்பற்றாளர்களான
1. கலாநாயகி
சூரியகுமார்.
2. குருநாதர் கிருஸ்ணமூர்த்தி.(குஞ்சன்)
3.கந்தசாமி சிவநாதன்
4.விஜயரட்ணம் கணேஸ்வரன்.
5.அன்ரனி சுரேஸ்குமார்.
6.கந்தையா உதயகுமார்.
7.வைத்திலிங்கம் பரமேஸ்வரன்.
8. கதிரேசு சதாநந்தம்
9. றிச்சார்ட் இமானுவேல்.
ஆகியோரது திருவுருவப்படங்களும் வைக்கப் பட்டு நினைவு கூரப்பட்டது. இது மிகவும் நெழ்வான தருணம் என்றே கூறமுடியும். மேலும் பொதுச்சுடர், தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு, ஈகைச்சுடர்,மலர் வணக்கம் வருகை தந்த உணர்வாளர்களால் செலுத்தப்பட்டு விடுதலை கானம். கவிதாஞ்சலி, நடனம் .வில்லிசை எனஅஞ்சலிகப்பட்டது.
இங்கு எழுச்சியுரையாற்றிய வட மத்திய மாநில பொருப்பாளர் திரு அவர் தனதுரையில் அன்னையின் ஈகமும் மாவீரர்களின் அற்புதமான அற்பணிப்பும் இன்று தமிழீழத்தில் சிறார்களின் கல்வித் தேவைக்கு நாம் உதவ முன்வரவேண்டும் கல்வியென்ற அடிப்படை கொடுப்போம்..... எழுச்சியுரை மிகவும் ஈர்க்கப்பட்டது.
மண்டபம் நிறைந்த மக்கள் வீழ்ச்சியல்ல இது மீழெழுச்சி நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் அனைவரும் மீட்டியதோடு தேசியக்கொடி இறக்கி எமது தமிழீழ தேசியக்கொடி என்றும் நிரந்தரமாக பட்டொளி வீசிப்பறக்க வேண்டும் அதுவரை ஓயமாட்டோம் என தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என உணர்வுகள் தாங்கி மக்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை