மட்டக்களப்பில் அஞ்சலி நிகழ்விற்கு பொலிஸார் தடை - சாணக்கியன்!!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் காலிமுகத்திடலிலும் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் நினைவேந்தல் நிகழ்வுகளை பொலிஸார் தடுக்க முற்படுகின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.