யாழில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

 


யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் ​நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.