எரிபொருள் இறக்கும் பணி இடைநிறுத்தம்!


 கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் இறக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொல்கஸ்ஓவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் சில நாட்களுக்கு முன்னர் கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தரையிறங்கிய சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எரிபொருட்களை இறக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, மறு அறிவித்தல் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வெளியிடப்பட மாட்டாது என விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.