உலக ஊடக சுதந்திர தரவரிசையில் பின்தங்கிய இலங்கை!

 


உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.

செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146வது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் ஸ்வீடனுக்கும் கிடைத்தது.
2021 ஆம் ஆண்டில், உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127 வது இடத்தில் இருந்தது.
இலங்கை 2020 இல் 127 வது இடத்திலும், 2019 இல் 126 வது இடத்திலும் 2018 இல் 131 வது இடத்திலும் இருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.