இலங்கை மின்சார சபைக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!


இலங்கை மின்சார சபைக்கு பொது பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (கோப்) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (09-06-2022) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினை எதிர்வரும் 7 ஆம் திகதி பொது நிர்வாகங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாய அமைச்சு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், மீன்பிடி அமைச்சு ஆகியவற்றினை அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.