முப்படைத் தளபதிகளை சந்தித்தார் கோட்டபாய!!

 


இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக்கோரி நாட்டு மக்கள் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், பதுங்கியிருப்பதாகவும் அவப்போது ஊடகங்களில் தகவல் வெளியாகி கொண்டுள்ளது..

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலேயே உள்ளார். இன்று (11-07-2022) காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது..

9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்றுநாடு திரும்பியுள்ள நிலையில் முப்படைகளின் தளபதிகளை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.