இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக சனத் ஜயசூரிய!!
![]() |
இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை (Sanath Jayasuriya) நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தீர்மானித்துள்ளார்.
புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று (04-08-2022) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர், மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #TamilNadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை